யாழினி

எம்.எஸ்.வியும் கவிஞரும்– அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம்
எம்.எஸ்.வியும் கவிஞரும்–

அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம்

கவியரசர் கண்ணதாசனின் பழக்க வழக்கங்களை அறியாதவர்கள் யாருமில்லை. ‘ஓரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு.. ‘ஒரு கோலமயில் என் துணையிருப்பு…. என்று தனது பாடல் வரிகளின் மூலமே தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட மகா துணிச்சல்காரர் அதே சமயம் அவரது எந்தப் பழக்கமும் அவரது தமிழைத் தளர்ந்துவிடச் செய்ததில்லை. அதிலும் குறிப்பாக எம்.எஸ்.வியும் அவரும் சேர்ந்து பணியாற்றிய போதெல்லாம் எந்தச் சமயத்தில் எந்தச் சூழலில் எப்படிப்பட்ட பல்லவி எப்படிப்பட்ட பல்லவி எங்கிருந்து பிறக்கும் என்று சொல்ல முடியாது.

பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் ‘பழநி’ படத்துக்கான வேலைகள் தொடங்கின. கவிஞர்-மெல்லிசை மன்னர் கொம்பினேஷன். அச்சமயத்தில் பீம்சிங்கின் ‘ப’ விரிசைப் படங்கள் பிரபலம். அதிலும் அந்தப் படங்கள் ஒவ்வொன்றிலும் டி.எம்.எஸ் குரலில் ஒரு தத்துவப்பாட்டு ஒலிக்கும். அதற்கு சிவாஜி வாயசைப்பார். கவியரசரின் பாடலாகவே பெரும்பாலும் அது இருக்கும். ‘பழநி’யிலும் சிவாஜி நடிக்க இருந்த அப்படி ஒரு பாடல் காட்சியை கவிஞரிடமும், எம்.எஸ்.வியிடமும் விளக்கியிருந்தார் பீம்சிங். பலமுறை முயன்றும் சரியான பல்லவி கவிஞருக்கு வரவில்லை. கவிதா ஹோட்டலில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அந்த நேரத்தில், ரொம்பவும் விலையுயர்ந்த ஃபிரான்ஸ் நாட்டு விஸ்கி போத்தல் ஒன்று அங்கே விலைக்கு வந்தது. ஒரு ஆள் அதைக் கொண்டு வந்திருந்தான். அந்தப் போத்தல் கவிஞரின் கண்ணில் பட்டுவிட்டது. அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்து விட்டார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலை சொன்னான் அந்த ஆள். அந்தப் போத்தலை வாங்குவதில் வெற்றி பெறாமல் கவிஞரின் கவனம் பல்லவி மீது படியாது என்று எம்.எஸ்.விக்குத் தெரிந்து விட்டது. ஆனால் கவிஞரிடம் பணமில்லை.

விஸ்வநாதனிடம் எவ்வளவு வச்சிருக்கே? என்றார்.

நான் எப்போ கவிஞரே, என் கையில் காசு வச்சிருக்கேன்? சம்பாதிக்கிற பணத்தை அப்படியே கொடுத்திட்டுத்தான் மறுவேலை பார்க்கிற ஆளென்று உங்களுக்குத் தெரியாதா?” என்றார் எம்.எஸ்.வி.

கவிஞர் சுற்றிலுமிருந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். மொத்தமாக அறுநூறு ரூபாய்கள்தான் தேறியது. மிச்சத்திற்கு என்ன செய்வது? யார் யாருக்கோ ஃபோன் போட்டுப் பேசினார் கவிஞர். நேரமாகிக் கொண்டிருந்தது.

பல்லவி பற்றிய சிந்தனையே இல்லை அப்போது அவருக்கு. எம்.எஸ்.வியோ பாடலுக்குக் காத்திருந்தார். தத்துவப் பாடலாக இருந்தால் வரிகள் வந்த பின்புதான் மெட்டு என்று முடிவு செய்திருந்தார்.

கடைசியில் தன் அண்ணன் ஏ எல் சீனிவாசனுக்கே ஃபோன் போட்டுப் பேசினார் கவிஞர். பணம் கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. அண்ணனிடமிருந்து திட்டுகளும், அறிவுரைகளும்தான் கிடைத்தன. கவிஞரின் கோபத்தை அவர் முகம் வெளிப்படுத்தியது. வேகமா விஸ்வநாதனிம் வந்தார்.

“இந்தாடா பல்லவி” என்றார்.

அண்ணன் என்னடா… தம்பி என்னடா… அவசரமான உலகத்திலே என்று பல்லவியுடன் பாட்டு பிறந்தது

மரண அறிவித்தல்கள்.பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நினைவஞ்சலிகள், தகவல்கள் யாழினி இணையதளத்தில் இலவசமாக பிரசுரிக்கப்படும்.

தொடர்புகளுக்கு

Email:-yaalini@yaalini.com

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்
கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்

பேட்ரிக் வீட்டை ஜேசுதாஸின் படங்களே நிரப்புகின்றன.

கர்நாடக இசைபாடும் உலகின் முதல் கறுப்பு ஆப்ரிக்கர் பேட்ரிக் என்கோபோ தென்னிந்திய இசையில் காட்டும் ஆர்வமும் அதில் அவருக்குள்ள திறமையும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன.

பேட்ரிக் பற்றிய சிறப்பு பெட்டகம்

ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் மொழியும் இனமும் இசை பயில தடையாகாது என்பதை நிரூபித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் ‘ஸுலு’ பழங்குடியினத்தை சேர்ந்த இந்த 34 வயது கறுப்புக் குயில்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஜேசுதாசின் பாடல் ஒன்றை கேட்டு மயங்கிய பேட்ரிக் கிறங்கவைக்கும் அந்த இசையை தானும் கற்கவேண்டும் என்று உறுதிபூண்டார்

அதிர்ஷ்டக் காற்று தன் பக்கம் அடிக்க தென்னாப்பிரிக்காவுக்கு கச்சேரிக்காக வந்த ஜேசுதாசிடம் தனது ஆர்வத்தை வெளிப்படுத்திஇ சென்னை வந்தால் தன்னிடம் இசை பயிலலாம் என்று ஒப்புதலை பெற்றார்.

மணிக்கணக்கில் சம்மணம் இட்டு உட்காருவதுகூட எனக்கு ஒரு சவால்தான்.

பேட்ரிக் இன்கோபோ

வறுமையால் வாடிய நிலையிலும்இ போராடிப் பணம் சேர்த்து சென்னையில் வந்திறங்கிய பேட்ரிக்இ குருகுலவாசம் போல ஜேசுதாசின் வீட்டிலேயே தங்கி பயிற்சி செய்து தனது இசையார்வத்திற்கு தீனி போட்டு வந்தார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு நடுவிலும் மூன்று ஆண்டுகள் சென்னையில் கர்நாடக இசையை பயின்று தேரினார் பேட்ரிக்.

கர்நாடக இசையை கற்றுப் பாடுவதற்கு வருடக் கணக்கில் கடும் உழைப்பும். பொறுமையும் தேவை. வெளிநாட்டவரான பேட்ரிக்குக்கு மொழியும் ஒரு தடை. ஆனால் அத்தடைகள் எல்லாவற்றையும் தாண்டி அவரால் சரியான உச்சரிப்புடன் ஏழு இந்திய மொழிகளில் பாட முடிகிறது.

இது தவிர தானாகவே ‘ஸுலு’ மொழியில் பாட்டெழுதி இந்திய ராகங்களில் மெட்டமைத்து பாடி தென்னாப்பிரிக்க ரசிகர்களையும் கவரக்கூடியவர் இவர்.

பேட்ரிக் பற்றி தமிழோசைக்கு கருத்து சொல்லிய பாடகர் ஜேசுதாஸ் அவரை மிகச் சிறந்த மாணவனாக மெச்சினார்.

எவ்வளவு தடையிருந்தாலும் விடாமுயற்சி ஒரு மனிதனை எங்கு இட்டுச் செல்லும் என்பதற்கு பேட்ரிக் ஒரு உதாரணம்

ஜேசுதாஸ்

கர்நாடக இசையின் பெருமையை உலகறியச் செய்வதே தனது கனவு என்று கூறுகிறார் பேட்ரிக் என்கோபோ.

நன்றி பி.பி.சி தமிழோசை

தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . ! துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ?
துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ?

தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . !

நிரோஜா, லோகநாதன்

மழலை வயதில் பள்ளிபோகும் தருணங்களில்

தினசரி உங்கள் விரல்கள் பிடித்திருப்போம்!

கைகளைப் பிடித்தவண்ணம்

அந்தப் பசுந்தீவைச் சுற்றிச் சுற்றி

மணலில் கால்த்தடம் பதித்து நடந்திருப்போம்!

காலையிலும் மாலையிலும்

கதைகள் கேட்டுக்கொண்டே

கடலலைகளின் ஓசைகளோடு உறங்கியிருப்போம்!

பறந்து செல்லும் பட்டாம் பூச்சிகளாக

சொந்த மண்ணில் . . . . . .

அந்த சுகமான தென்றற் காற்றில் . . . .

உங்கள் முன்னால் வளர்ந்திருப்போம்!

இவை அனைத்தும் எமக்கு

அதிஸ்டம் இல்லாமல் போய்விட்டன!

குழந்தைகளாக சந்திப்புகள் நேரவில்லை

உங்களைச் சந்திக்க நேர்ந்தபோது . . . . .

குழந்தை போலத் தோற்றம் அளித்தவர்

நீங்கள் தான்!

மண்ணை மட்டுமல்லாமல்

சொந்தங்களையும் பிரிந்தோம்!

சுமைகளைச் சுமந்தவரானாலும்

உறவுகளை நெஞ்சில் வைத்து சுமக்க

கற்றுத் தந்தவர் எம் அப்பா!

உங்கள் நினைவுகள் தூரங்களை மட்டுமல்ல

காலங்களையும் கடந்து நிற்கும்!

(தூண்டுதலெதுவுமற்று எங்காவது எழுத்துக்கள் தேடிப் பொறுக்கித் தன்னார்வத்தாற் தமிழ் கற்ற நிரோஜா! இவர் ஜேர்மனியின் நொயிஸ் நகரில் பிறந்தவர்! தமிழாலயத் தமிழ்க் கற்கவில்லை! தமிழாலயத்தைவிட துண்டுப்பேப்பர் பல மடங்கு மேல் என நிறுவிட்டார்! அவரது கவிதை, கட்டுரைகள் டொச் மொழியிலும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் உயிரியல் இரசாயனம் மூன்றாம் ஆண்டு மாணவி!)

ழூ (மேற்படி கவிதை நெடுந்தீவு, இலங்கையைச் சேர்ந்த இவரது பேரன் ஆ. வைத்தியநாதன்(97) கடந்த 14.01.2011 காலமானதின் நினைவாக எழுதிய கவிதை! இந்த இளம் கவியின் உணர்வுகள் ஏதோ ஒரு வகையில் எம்மையும் பாதிக்கின்றன)

28.01.2011

ஆலயம் என்பது வீடாகும் காசை வைத்தால்!
கனடா நாட்டில் மொன்றியால் நகரில் சென்ற் லோரன்ஸ் வீதியிலுள்ள குட்டி இத்தாலிப் பகுதியில் உள்ள கிறீஸ்தவ ஆலயம் ஒன்று அடுக்கு வீடாக மாற்றப்பட்டுள்ளது. இதிலுள்ள ஒவ்வொரு வீடும் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரை பெறுமதி வாய்ந்ததாகும்.

இறந்து போவது மேலாகும்..!
இறந்து போவது மேலாகும்..!

சோரும் போது ”சொறிந்து” கொடுத்தால்

சோகம் எமக்கு காலாகும்!

பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால்

பாலும் கூட பாழாகும்!

துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு

துயரம் யாவும் தூளாகும்!

”இரந்து வாழும் வாழ்வைக் காட்டிலும்

இறந்து போவது மேலாகும்”

உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை

உசுப்பும் கவிதை வாளாகும்

வீரம்மறந்து வீழ்ந்து கிடந்தால்

விடியல் தோன்ற நாளாகும்

”பயந்து வாயை பொத்தியிருந்தால்

பழைய சோறும் கிடைக்காது!”

துணிந்து எதிர்த்து கேட்கும் நெஞ்சை

தோட்டாக் கூட துளைக்காது!

நாய்கள் போடும் கூச்சல் கேட்டால்

நாளை உனக்கு விடியாது!

உறுதிநெஞ்சில் இருந்தால் உந்தன்

உயர்வை தடுக்க முடியாது.

கவிஞர் அஸ்மின்

மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் வைத்தியநாதன்

பிறப்பு :                          இறப்பு

25-09-1917                        14-01-2011

நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு ஆறுமுகம் வைத்தியநாதன் அவர்கள் 14-01-2011 அன்று இந்தியாவில் திருச்சியில் காலமானார்.

அன்னார் ஆறுமுகம் ராமசாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பசுபதி அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், கோமளம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

திரு லோகநாதன் ஆசிரியர்(ஜேர்மனி) பத்மராணி(தவம்-கனடா), கருணைநாதன்(கருணா-இலங்கை), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜிதா, சண்முகநாதன், யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும், கற்பகம், பார்வதி, நாகமுத்து, சின்னம்மா, வேலாயுதம், நாகலிங்கம், ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயவதி(லண்டன்), ஜெயமணி(கனடா), ஜெயநாதன்(லண்டன்), காலஞ்சென்ற வசந்தராணி, புண்ணியமூர்த்தி(லண்டன்), கலாதேவி(கனடா), ராஜசேகர்(லண்டன்),

விஜயநிர்மலா(லண்டன்) ஆகியோரின் சிறிய தந்தையாரும்,

நிரோஜா, நெதெல், கவிதா, காலஞ்சென்ற காhத்திகா, ராகுலன், தேவானந்த், தட்சாயினி, நாவரசன், ஆகியோரின் அன்புப் பேரனும்,

நித்திலா அவர்களின் அன்புப் பாட்டனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 16-01-2011 ஞாயிற்றுக்கிழமை திருச்சி கரு மண்டபம் மின்மயானத்தில் நடைபொறும்.

இந்த அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

தகவல்

குடும்பத்தினர்.

மேலதிக தொடர்புகள்

கோமளம், கருணா- இந்தியா

தொலைபேசி :-914312483745

லோகநாதன்- ஜேர்மனி

தொலைபேசி :- 4921312911876

சண்முகநாதன்-கனடா

தொலைபேசி :-16477053872

சபரிமலை யாத்திரையில் இலங்கைத் தமிழர்கள் உட்பட 106 பேர் நெரிசலில் பலி
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை காண சென்ற தமிழகம், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 106 பேர், கூட்டநெரிசலில் சிக்கி பலியாயினர். லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த இடம் வெளிச்சம் இல்லாத அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலில் திரண்டனர். இதனால், போலீசார் கோயிலை சுற்றியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கேரள மாநிலம் குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், வல்லக்கடவு வழியாக வந்த பக்தர்கள், சபரிமலையிலிருந்து 7 கி.மீ., தூரத்தில் உள்ள வனப்பகுதியான புல்மேடு பாதைக்கு வந்தனர்.

ஜோதி தரிசனம்: அதிக கூட்டம் காரணமாக கோயிலுக்கு அருகே செல்ல முடியாத நிலையில், அங்கிருந்தே மகரஜோதியை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு ஜோதி தரிசனம் செய்துவிட்டு, வண்டிப்பெரியார் நோக்கி பக்தர்கள் திரும்பினர். வனப்பகுதி என்பதால் சரியான பாதை வசதி இல்லை. மேலும் குறுகிய இடத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததாலும், தரிசனம் முடித்துவிட்டு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசல்: சிறிது தூரத்தில் பக்தர்களை ஏற்றிச் செல்ல வாடகை ஜீப் ஒன்று நின்று கொண்டிருந்தது. கூட்ட நெரிசலில் இருந்து வெளியேறவும் ஜீப்பில் ஏறிச்செல்லவும் ஒரே நேரத்தில் பல பக்தர்கள் முயன்றனர். பலர் ஜீப்பில் ஏறியதும், நின்றுகொண்டுஇருந்த ஜீப் கவிழத்தொடங்கியது. இதையறிந்த பின்னால் வந்த பக்தர்கள் ஜீப் தங்கள் மீது விழுந்து விடுமோ என்று பயந்து தப்பித்து ஓடினர். இதில், பலர் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்படவே பலரும் முண்டியடித்துக் கொண்டு விலகி ஓட முயல ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர். இதில் மூச்சுத்திணறியும், வனப்பகுதியிலுள்ள பாறை மீது மோதியும் பலர் உயிரிழந்தனர்.

மீட்பு பணியில் சிக்கல்: இரவு 9 மணிக்கு இந்த சம்பவம் நடந்தும், தாமதமாகவே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இரவு 10 மணிக்கு போலீசார், தீயணைப்பு துறை, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை துவக்கினர். சம்பவ இடத்திற்கு செல்ல இடையூறாக வண்டிப்பெரியார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. மேலும் இரவு நேரம் என்பதால் வனப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததும் மீட்பு பணியில் சிக்கலை ஏற்படுத்தியது. கேரள டி.ஜி.பி., ஜேக்கப் குன்னூஸ், ஐ.ஜி.,கள் சந்தியா, ஹேமச்சந்திரன், எஸ்.பி., ஜார்ஸ்வர்கீஸ் கலெக்டர் அசோக்குமார்சிங் ஆகியோர் முன்னிலையில் மீட்புப்பணியில் போலீஸ், தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணிக்குத் தான் மூன்று உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு குமுளி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவதில், போக்குவரத்து நெரிசலால் சிக்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக அதிகாலை 4 மணி முதல் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்தன. காலை 7 மணிக்கு மீட்பு பணி முழுமை அடைந்தது. இதில், ஒரு பெண், மூன்று குழந்தைகள் உட்பட 106 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இறுதிச்சடங்கிற்கு உதவி: இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல, சவப்பெட்டிகளுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்தது. இடுக்கி, பத்தனம்திட்டா பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதிச்சடங்கிற்காக கேரள அரசு 5000 ரூபாய் வழங்கி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உதவி: “சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 106 பேர் பலியாகினர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை வனப்பகுதியில், ஏற்பட்ட நெரிசலில் பலர் இறந்தனர். மரணம் அடைந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளதாக முதல் நிலை தகவல் தெரிவிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்கும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு: அதே போல் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் சார்பில் மீட்புக்குழு: இறந்த தமிழக பக்தர்களின் உடல்களை அவரவர் ஊருக்கு அனுப்பிவைக்கவும், உறவினர்களுக்கு உதவவும் தேனி கலெக்டர் முத்துவீரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. பெரியகுளம் ஆர்.டி.ஓ., இளங்கோவன் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் தனியாக உதவி மையம் திறந்து (போன்: 04554-235 254) உதவிகளை செய்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிகளை செய்தனர்.

சபரிமலை சோகம்

சபரிமலைக்கு எத்தனை பாதை: சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பதற்கு, பக்தர்கள் மூன்று பாதைகளை பயன்படுத்துகின்றனர். முதலாவதாக கோட்டயத்தில் இருந்து பம்பை செல்வது ஒரு பாதை. எரிமேலியில் இருந்து பம்பை செல்வது அடுத்த வழித் தடம். இந்த இரண்டு பாதையைத் தான், பக்தர்கள் பெரும்பாலும் அதிகமாக பயன்படுத்துவர். 3வது பாதை, வண்டிப்பெரியாரில் இருந்து சபரிமலை செல்வது. தமிழகத்தின் தேனி, கம்பம், மதுரை போன்ற இடங்களில் இருந்து செல்லும் பக்தர்கள், இந்த பாதையைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். விபத்து நடந்த தினத்தில் மட்டும், மூன்று லட்சம் பக்தர்கள் இந்த பாதையை பயன்படுத்தியுள்ளனர்.

புலிகள் அதிகம் நடமாடும் இடம்: நேற்று முன்தினம், சபரிமலை அருகேவிபந்து நடந்த இடம், புல்மேடு என, அழைக்கப்படுகிறது. அடர்ந்த வனப் பகுதி என்பதால், இங்கு புலி மற்றும் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதாக பக்தர்கள் கூறுவது உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இங்கு புலி, சிறுத்தை போன்ற மிருகங்களால், பக்தர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் நடந்தது உண்டு. மேலும், இந்த பகுதி முழுவதும் அடர்த்தியான புல்வெளிகள் நிறைந்து காணப்படும். இதனால் தான் இதை புல்மேடு என, கூறுகின்றனர்.

எங்கு பார்த்தாலும் கறுப்பு மயம்: விபத்து நடந்த புல்மேடு பகுதியில் பக்தர்கள் அணிந்திருந்த மற்றும் கொண்டு வந்திருந்த கறுப்பு மற்றும் காவி நிற உடைகள் சிதறிக் கிடந்தன. இதனால், எங்கு பார்த்தாலும் ஒரே கறுப்பு மயமாக இருந்தது. பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பிரசாத பொட்டலங்கள், அந்த பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. பக்தர்களின் பேக், துணிப் பைகள் ஆகியவையும் அந்த பகுதியில் நிறைந்து காணப்பட்டன.

இரண்டு மணி நேரமாயிற்று: புல்மேடு பகுதியில் பக்தர்கள் நெரிசல் காரணமாக, இரவு 8.15க்கு விபத்து ஏற்பட்டது. இருந்தாலும், இந்த விபத்து விவரம் யாருக்கும் தெரியவில்லை. விபத்து நடந்த இடம், அடர்ந்த வனப் பகுதி என்பதாலும், உரிய நேரத்தில் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்பதாலும், இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் தான், விபத்தின் விபரீதம் வெளி உலகிற்கு தெரியவந்தது. மீட்பு குழுவினரும், அதற்கு பின்தான் பணியை துவக்கினர்.

போலீசார் குறைவு: விபத்து நடந்த இடத்தில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு போலீசார் எண்ணிக்கை இல்லை. பெரும்பாலான போலீசார், சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு இருந்தனர். புல்மேடு பகுதியில் இந்த அளவுக்கு அதிகமான பக்தர்கள் வருவர் என, யாருமே எதிர்பார்க்காததால், இங்கு போதிய அளவு போலீசார் பணி அமர்த்தப்படவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.

கடற்படை விரைந்தது: கொச்சியில் உள்ள தெற்கு பிராந்திய கடற்படை தளத்தில் இருந்து, விபத்து நடந்த புல்மேடு பகுதிக்கு, மருத்துவ குழு ஒன்று, ஹெலிகாப்டர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஏராளமான மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டன. மற்றொரு ஹெலிகாப்டர் கண்ணூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில், கேரள முதல்வர் அச்சுதானந்தன் சென்றார்.

ஜனவரி 14 கறுப்பு நாள்: சபரிமலை பக்தர்களுக்கு, கடந்த 14ம் தேதி, கறுப்பு நாளாக மாறி விட்டது. கடந்த 1952 ஜனவரி 14ல் சபரிமலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 66 பக்தர்கள் பலியாயினர். இதேபோல், கடந்த 1998ல் ஜனவரி 14ல், பம்பையில் குவிந்திருந்த பக்தர்களிடையே திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் 52 பக்தர்கள் பலியாயினர். தற்போது நடந்த விபத்தும், ஜனவரி 14ல் தான் நடந்துள்ளது. கடந்த 1998ல் ஏற்பட்ட விபத்துக்கு பின், பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கேரள போலீசார் அறிவியல் பூர்வமான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக விபத்து எதுவும் ஏற்படாமல் இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள விபத்து, சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

நடிகர் உயிர் தப்பினார்: பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய், சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தர். கடந்த 13 ஆண்டுகளாக அவர், சபரிமலைக்கு வந்து செல்கிறார். இந்தாண்டும், மகர ஜோதி தரிசனத்தை காண்பதற்காக அவர், கடந்த வியாழன் இரவே சபரிமலைக்கு வந்து விட்டார். தரிசனம் முடிந்ததும், அவர் மும்பை புறப்பட்டுச் சென்றார். அடுத்த ஒரு சில மணி நேரத்தில் புல்மேடு பகுதியில் நெரிசல் ஏற்பட்டு, மிகப் பெரிய துயரம் அரங்கேறி விட்டது.

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்: கேரளாவில் நெரிசலில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் இறந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். இதேபோல், பிரதமர் மன்மோகன்சிங்கும் முதல்வர் அச்சுதானந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சபரிமலை நெரிசல் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். அத்துடன் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், சம்பவம் குறித்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடல்களை வைக்கக்கூட இடமில்லை

* இறந்தவர்களின் உடல்கள் வைக்ககூட குமுளி அரசு ஆஸ்பத்திரியில் இடம் இல்லை.

* ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் பலியான சம்பவம் தெரிந்தவுடனேயே குமுளி ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரும் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

* பலியானவர்களில் கர்நாடகாவை சேர்ந்த 25 பேரின் உடல்களை, அம்மாநில அரசு ஹெலிகாப்டர் மூலம் கொச்சி எடுத்துச்சென்று, அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு சென்றது.

* ஆந்திராவை சேர்ந்த பலியான 16 பேரின் உடல்களை கொச்சி வழியாக ஐதராபாத் எடுத்துச்செல்ல அம்மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.

* சவப்பெட்டிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் உடனடியாக தயாரிக்க உத்தரவிடப்பட்டது.

* ஆம்புலன்ஸ் பற்றாக்குறை காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டன. மேலும் தமிழகத்திலிருந்தும் ஆம்புலன்ஸ்கள் சென்றது.

பாதுகாப்புக்கு ஒரு போலீசார் கூட இல்லை: உயிர் தப்பியவர்கள் உருக்கமான பேட்டி: புல்மேட்டில் நேற்று முன்தினம் நடந்த நெரிசலில் சிக்கி 106 பக்தர்கள் பலியாயினர். இதில் காயமடைந்தவர்கள் கூறியதாவது:

பி.சின்னச்சாமி, சேலம்: மூச்சு விடக்கூட முடியாத அளவிற்கு புல்மேடு பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இறங்கி வந்து கொண்டிருந்தனர். பாதையின் இருபுறமும் உள்ள கடைகள், அவற்றில் இருந்து வந்த கழிவு நீர் இவற்றால் பாதை முழுவதும் ஒரே தண்ணீர், சகதியாக இருந்தது. கூட்டத்தை ஒழுங்கு படுத்த போலீசார் யாரும் இல்லை. ஆறு வாகனங்களில் சென்ற 69 பேரில் நான் மட்டும் கூட்ட நெரிசலில் சிக்கி எப்படியோ உயிர் தப்பி விட்டேன்.

எஸ்.கன்னையா, தர்மபுரி: புல்மேடு பகுதியில் இருந்து ஏழு கி.மீ.,தூரத்திற்கு அப்பால் தமிழக வாகனங்களை நிறுத்தி விட்டனர். ஆனால், கேரள வாகனங்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி கூட்ட நெரிசல் பகுதிக்கு வந்து சென்றன. குறுகலான பாதையில் வந்தபோது, ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப், ஆட்டோவை தள்ளும் நிலை ஏற்பட்டது. பல பக்தர்கள் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தனர். விழுந்தவர்களை அருகிலிருந்தவர்கள் தூக்கி விடுவதற்குள், அடுத்தடுத்து ஒருவர் மேல் ஒருவர் விழும் நிலை ஏற்பட்டது. அடியில் சிக்கியவர்கள் மிதிபட்டு இறந்தனர். பலர் காயம் அடைந்து மூர்ச்சையாகி கிடந்தனர். அவர்களை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் பாதுகாப்புக்கு போலீசார் ஒருவர் கூட இல்லை. பக்தர்களை ஒழுங்குபடுத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்தி இருந்தாலோ அல்லது வாகனங்களை அனுமதிக்காமல் இருந்திருந்தாலோ, இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.

கேரளத்தில் மூன்று நாள் துக்கம்: ஐயப்ப பக்தர்கள் பலியானதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கேரளத்தில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என, முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார். சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததைத் தொடர்ந்து குமுளி வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பக்தர்களின் உடல்களை பார்வையிட்டார். பின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அவர் கூறியதாவது: இறந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு மற்றும் தேவசம்போர்டு சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதிக காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உடல்களை அவரவர் மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதியும், தேவைப்பட்டால் விமானத்தில் கொண்டு செல்லவும் அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர இறுதி சடங்கிற்காக தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகம் பலியாகி உள்ளனர். அவர்களின் விபரம் முழுமையாக இன்னும் தெரியவில்லை. பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரள அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கும். சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புல்மேடு பகுதியில் ரோடு வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் செய்யாதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அச்சுதானந்தன், “”எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. உங்களுக்கு எது தோன்றுகிறதோ அதை எழுதிக்கொள்ளுங்கள்,” என்றார்.

பாதுகாப்பில் அலட்சியமே விபத்திற்கு காரணம்: விபத்து நடந்த புல்மேடு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது. குறுகலான பாதையுள்ள வனப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முண்டியடித்து சென்றுள்ளனர். இதை யாரும் ஒழுங்குபடுத்தவில்லை. இவர்களை கட்டுப்படுத்தி முறைப்படுத்த போதுமான போலீசார் பணியில் இல்லை. அங்கு பெயரளவில் ஐந்து போலீசாரே இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கேரள ஜீப் டிரைவர்கள், ஆட்டோக்கள் இந்த குறுகலான பாதையையும் அடைத்து நின்று கொண்டு ஆட்களை ஏற்றி உள்ளனர். ஜீப்பில் அளவுக்கு அதிகமாக 30 பேர் வரை ஏற்றியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடியே உயிர்சேதம் அதிகமாக காரணமாக இருந்துள்ளது.

42 வருடங்களின் பின் தாயுடன் இணைந்தவர்
பெல்ஜியம் நாட்டு தம்பதியினருக்கு தத்துப்பிள்ளையாக சென்றவர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை கண்டுபிடித்து அவருடன் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (63). திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவரை இழந்ததால் வறுமையில் வாடிய அவர் காரைக்காலில் உள்ள கிறிஸ்தவ மிஷன் ஒன்றில் தனது பெயரை சோபியாமேரி என மாற்றிக் கொண்டு பணிபுரிந்தார்.அங்கு 1968ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அனிதா என்ற அக்குழந்தையை வளர்க்க முடியாமல் புதுச்சேரி காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.

அனிதாவிற்கு இரண்டு வயதான போது புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் அனிதாவை தத்தெடுத்து ஜாஸ்மின் என பெயர் மாற்றம் செய்து பெல்ஜியத்தில் வளர்த்தனர். தற்போது 43 வயதாகும் ஜாஸ்மினுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.புதுச்சேரியில் இருந்து தான் தத்தெடுக்கப்பட்ட விவரம் தன்னை வளர்த்தவர்கள் மூலம் ஜாஸ்மினுக்கு சமீபத்தில் தெரிந்தது. இதையடுத்து தனது தாயைப் பார்க்க அவர் ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கினார்.

காரைக்காலில் அவரது பிறப்புப் சான்று கிடைத்தது. உடன் தனது கணவர் பிலிப்புடன் கடந்த வாரம் புதுச்சேரியில் தான் வளர்ந்த குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று விசாரித்தார். அதில் சோபியாமேரி காட்டுமன்னார்கோவிலில் இருப்பதாக தெரிவித்தனர். அங்கு ஆலயத’தில்  விசாரித்த போது புதுத்தெருவில் அவரது தம்பி வீட்டில் வசிப்பதாக தகவல் கிடைத்தது.உடனே அங்கு சென்று தாய் சரஸ்வதி என்கிற சோபியாமேரியை சந்தித்தார். 41 ஆண்டுகள் கழித்து பிறந்த நாள் அன்று தன் தாயை பார்த்த மகிழ்ச்சியில் ஜாஸ்மினும் மகளைப் பார்த்த சந்தோஷத்தில் தாயும் கண்ணீர் மல்க கட்டி தழுவிக் கொண்டனர். ஜாஸ்மின் தனது பிறந்த நாளை தனது தாயுடன் கொண்டாடினார். தாய் பேசும் மொழி மகளுக்கும் மகள் பேசுவது தாய்க்கும் புரியாமல் செய்கை மூலம் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

சின்னத்திரை நடிகை ஷோபனாவின் மரணத்தில் சந்தேகம்
சென்னையில் தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை ஷோபனா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஜெயராமன் – “வைரம் ராணி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஷோபனா (32); துணை நடிகை. நடிகர் வடிவேலுவுடன் “ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில்  நகைச்சுவை காட்சிகளில்  நடித்துள்ளார். இது தவிர நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் காமெடி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். நேற்று முன்தினம் பிற்பகல் வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பிய ஷோபனாவின் தாய் ராணி வீட்டை திறந்து பார்த்த போது அங்கு தூக்கில் பிணமாக ஷோபனா தொங்கிக் கொண்டிருந்தார்.

கோட்டூர்புரம் போலீசார் ஷோபனாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு நேற்று மாலை ஷோபனாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான ஷோபனாவின் இந்த தற்கொலை முடிவில் பல மர்மங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு படங்களில் நடித்து வந்த ஷோபனா  படங்களில் உடன் பணியாற்றிய நபர் ஒருவரின் காதல்வலையில் சிக்கியுள்ளார். முதலில் திருமணம் செய்து கொள்வதாக கூறிய அவர் இறுதியில் மறுத்து வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த விரக்தியில் திருமணமே வேண்டாம் என்ற முடிவில் ஷோபனா உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடித்த படங்களில் கிடைத்த குறைவான சம்பளம் அவரை மிகுந்த கஷ்டத்திற்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையில் அடிக்கடி ஆஸ்துமா தொல்லை ஏற்பட்டதாலும் உடன் மஞ்சள் காமாளைசிக்குன்-குனியா போன்றவற்றின் தாக்குதலாலும் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். உடலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு செலவு செய்ய முடியாதது காதல் தோல்வி இவை இரண்டும் ஷோபனாவின் மனதை பாதித்திருந்ததாக கூறப்படுகிறது.  இருந்தாலும் தற்போது வரை ஷோபனாவின் தற்கொலைக்கான காரணத்தை போலீசாரால் சரியாக அறியமுடியவில்லை.

தற்கொலைக்கு காரணமாக சொல்லப்படும் வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்மைதானா என்பதை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் ஷோபனாவின் தாயார் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே ஷோபனா தூக்கிடுவதற்கு முன் யாராவது வந்து சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தவிர ஷோபனாவின் தோழிகள் உடன் பணியாற்றியவர்கள் முன்னாள் காதலனிடமும் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.