எம்.எஸ்.வியும் கவிஞரும்– அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம்
எம்.எஸ்.வியும் கவிஞரும்–
கவியரசர் கண்ணதாசனின் பழக்க வழக்கங்களை அறியாதவர்கள் யாருமில்லை. ‘ஓரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு.. ‘ஒரு கோலமயில் என் துணையிருப்பு…. என்று தனது பாடல் வரிகளின் மூலமே தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட மகா துணிச்சல்காரர் அதே சமயம் அவரது எந்தப் பழக்கமும் அவரது தமிழைத் தளர்ந்துவிடச் செய்ததில்லை. அதிலும் குறிப்பாக எம்.எஸ்.வியும் அவரும் சேர்ந்து பணியாற்றிய போதெல்லாம் எந்தச் சமயத்தில் எந்தச் சூழலில் எப்படிப்பட்ட பல்லவி எப்படிப்பட்ட பல்லவி எங்கிருந்து பிறக்கும் என்று சொல்ல முடியாது.
பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் ‘பழநி’ படத்துக்கான வேலைகள் தொடங்கின. கவிஞர்-மெல்லிசை மன்னர் கொம்பினேஷன். அச்சமயத்தில் பீம்சிங்கின் ‘ப’ விரிசைப் படங்கள் பிரபலம். அதிலும் அந்தப் படங்கள் ஒவ்வொன்றிலும்
டி.எம்.எஸ் குரலில் ஒரு தத்துவப்பாட்டு ஒலிக்கும். அதற்கு சிவாஜி வாயசைப்பார். கவியரசரின் பாடலாகவே பெரும்பாலும் அது இருக்கும். ‘பழநி’யிலும் சிவாஜி நடிக்க இருந்த அப்படி ஒரு பாடல் காட்சியை கவிஞரிடமும், எம்.எஸ்.வியிடமும் விளக்கியிருந்தார் பீம்சிங். பலமுறை முயன்றும் சரியான பல்லவி கவிஞருக்கு வரவில்லை. கவிதா ஹோட்டலில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அந்த நேரத்தில், ரொம்பவும் விலையுயர்ந்த ஃபிரான்ஸ் நாட்டு விஸ்கி போத்தல் ஒன்று அங்கே விலைக்கு வந்தது. ஒரு ஆள் அதைக் கொண்டு வந்திருந்தான். அந்தப் போத்தல் கவிஞரின் கண்ணில் பட்டுவிட்டது. அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்து விட்டார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலை சொன்னான் அந்த ஆள். அந்தப் போத்தலை வாங்குவதில் வெற்றி பெறாமல் கவிஞரின் கவனம் பல்லவி மீது படியாது என்று எம்.எஸ்.விக்குத் தெரிந்து விட்டது. ஆனால் கவிஞரிடம் பணமில்லை.
டி.எம்.எஸ் குரலில் ஒரு தத்துவப்பாட்டு ஒலிக்கும். அதற்கு சிவாஜி வாயசைப்பார். கவியரசரின் பாடலாகவே பெரும்பாலும் அது இருக்கும். ‘பழநி’யிலும் சிவாஜி நடிக்க இருந்த அப்படி ஒரு பாடல் காட்சியை கவிஞரிடமும், எம்.எஸ்.வியிடமும் விளக்கியிருந்தார் பீம்சிங். பலமுறை முயன்றும் சரியான பல்லவி கவிஞருக்கு வரவில்லை. கவிதா ஹோட்டலில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அந்த நேரத்தில், ரொம்பவும் விலையுயர்ந்த ஃபிரான்ஸ் நாட்டு விஸ்கி போத்தல் ஒன்று அங்கே விலைக்கு வந்தது. ஒரு ஆள் அதைக் கொண்டு வந்திருந்தான். அந்தப் போத்தல் கவிஞரின் கண்ணில் பட்டுவிட்டது. அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்து விட்டார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலை சொன்னான் அந்த ஆள். அந்தப் போத்தலை வாங்குவதில் வெற்றி பெறாமல் கவிஞரின் கவனம் பல்லவி மீது படியாது என்று எம்.எஸ்.விக்குத் தெரிந்து விட்டது. ஆனால் கவிஞரிடம் பணமில்லை.நான் எப்போ கவிஞரே, என் கையில் காசு வச்சிருக்கேன்? சம்பாதிக்கிற பணத்தை அப்படியே கொடுத்திட்டுத்தான் மறுவேலை பார்க்கிற ஆளென்று உங்களுக்குத் தெரியாதா?” என்றார் எம்.எஸ்.வி.
கவிஞர் சுற்றிலுமிருந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். மொத்தமாக அறுநூறு ரூபாய்கள்தான் தேறியது. மிச்சத்திற்கு என்ன செய்வது? யார் யாருக்கோ ஃபோன் போட்டுப் பேசினார் கவிஞர். நேரமாகிக் கொண்டிருந்தது.
பல்லவி பற்றிய சிந்தனையே இல்லை அப்போது அவருக்கு. எம்.எஸ்.வியோ பாடலுக்குக் காத்திருந்தார். தத்துவப் பாடலாக இருந்தால் வரிகள் வந்த பின்புதான் மெட்டு என்று முடிவு செய்திருந்தார்.
கடைசியில் தன் அண்ணன் ஏ எல் சீனிவாசனுக்கே ஃபோன் போட்டுப் பேசினார் கவிஞர். பணம் கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. அண்ணனிடமிருந்து திட்டுகளும், அறிவுரைகளும்தான் கிடைத்தன. கவிஞரின் கோபத்தை அவர் முகம் வெளிப்படுத்தியது. வேகமா விஸ்வநாதனிம் வந்தார்.
“இந்தாடா பல்லவி” என்றார்.
அண்ணன் என்னடா… தம்பி என்னடா… அவசரமான உலகத்திலே என்று பல்லவியுடன் பாட்டு பிறந்தது

