|

தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . ! துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ?

துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ?
தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . !
நிரோஜா, லோகநாதன்
மழலை வயதில் பள்ளிபோகும் தருணங்களில்
தினசரி உங்கள் விரல்கள் பிடித்திருப்போம்!
கைகளைப் பிடித்தவண்ணம்
அந்தப் பசுந்தீவைச் சுற்றிச் சுற்றி
மணலில் கால்த்தடம் பதித்து நடந்திருப்போம்!
காலையிலும் மாலையிலும்
கதைகள் கேட்டுக்கொண்டே
கடலலைகளின் ஓசைகளோடு உறங்கியிருப்போம்!
பறந்து செல்லும் பட்டாம் பூச்சிகளாக
சொந்த மண்ணில் . . . . . .
அந்த சுகமான தென்றற் காற்றில் . . . .
உங்கள் முன்னால் வளர்ந்திருப்போம்!
இவை அனைத்தும் எமக்கு
அதிஸ்டம் இல்லாமல் போய்விட்டன!
குழந்தைகளாக சந்திப்புகள் நேரவில்லை
உங்களைச் சந்திக்க நேர்ந்தபோது . . . . .
குழந்தை போலத் தோற்றம் அளித்தவர்
நீங்கள் தான்!
மண்ணை மட்டுமல்லாமல்
சொந்தங்களையும் பிரிந்தோம்!
சுமைகளைச் சுமந்தவரானாலும்
உறவுகளை நெஞ்சில் வைத்து சுமக்க
கற்றுத் தந்தவர் எம் அப்பா!
உங்கள் நினைவுகள் தூரங்களை மட்டுமல்ல
காலங்களையும் கடந்து நிற்கும்!
(தூண்டுதலெதுவுமற்று எங்காவது எழுத்துக்கள் தேடிப் பொறுக்கித் தன்னார்வத்தாற் தமிழ் கற்ற நிரோஜா! இவர் ஜேர்மனியின் நொயிஸ் நகரில் பிறந்தவர்! தமிழாலயத் தமிழ்க் கற்கவில்லை! தமிழாலயத்தைவிட துண்டுப்பேப்பர் பல மடங்கு மேல் என நிறுவிட்டார்! அவரது கவிதை, கட்டுரைகள் டொச் மொழியிலும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் உயிரியல் இரசாயனம் மூன்றாம் ஆண்டு மாணவி!)
ழூ (மேற்படி கவிதை நெடுந்தீவு, இலங்கையைச் சேர்ந்த இவரது பேரன் ஆ. வைத்தியநாதன்(97) கடந்த 14.01.2011 காலமானதின் நினைவாக எழுதிய கவிதை! இந்த இளம் கவியின் உணர்வுகள் ஏதோ ஒரு வகையில் எம்மையும் பாதிக்கின்றன)
28.01.2011

Comments are closed