Home » செய்திகள் You are browsing entries filed in “செய்திகள்”

ஆலயம் என்பது வீடாகும் காசை வைத்தால்!

ஆலயம் என்பது வீடாகும் காசை வைத்தால்!

கனடா நாட்டில் மொன்றியால் நகரில் சென்ற் லோரன்ஸ் வீதியிலுள்ள குட்டி இத்தாலிப் பகுதியில் உள்ள கிறீஸ்தவ ஆலயம் ஒன்று அடுக்கு வீடாக மாற்றப்பட்டுள்ளது. இதிலுள்ள ஒவ்வொரு வீடும் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரை பெறுமதி வாய்ந்ததாகும்.

JanuaryJrd,2011 | Posted in சுவாரஸ்யம், செய்திகள் | Read More »

சபரிமலை யாத்திரையில் இலங்கைத் தமிழர்கள் உட்பட 106 பேர் நெரிசலில் பலி

சபரிமலை யாத்திரையில்  இலங்கைத் தமிழர்கள் உட்பட 106 பேர் நெரிசலில் பலி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை காண சென்ற தமிழகம், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 106 பேர், கூட்டநெரிசலில் சிக்கி பலியாயினர். லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த இடம் வெளிச்சம் இல்லாத அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலில் திரண்டனர். இதனால், போலீசார் [...]

JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள், MEDIA NEWS | Read More »

42 வருடங்களின் பின் தாயுடன் இணைந்தவர்

42 வருடங்களின் பின் தாயுடன் இணைந்தவர்

பெல்ஜியம் நாட்டு தம்பதியினருக்கு தத்துப்பிள்ளையாக சென்றவர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை கண்டுபிடித்து அவருடன் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (63). திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவரை இழந்ததால் வறுமையில் வாடிய அவர் காரைக்காலில் உள்ள கிறிஸ்தவ மிஷன் ஒன்றில் தனது பெயரை சோபியாமேரி என மாற்றிக் கொண்டு பணிபுரிந்தார்.அங்கு 1968ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அனிதா என்ற அக்குழந்தையை வளர்க்க முடியாமல் புதுச்சேரி [...]

JanuaryJth,2011 | Posted in செய்திகள், MEDIA NEWS | Read More »

சின்னத்திரை நடிகை ஷோபனாவின் மரணத்தில் சந்தேகம்

சின்னத்திரை நடிகை ஷோபனாவின் மரணத்தில் சந்தேகம்

சென்னையில் தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை ஷோபனா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஜெயராமன் – “வைரம் ராணி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஷோபனா (32); துணை நடிகை. நடிகர் வடிவேலுவுடன் “ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில்  நகைச்சுவை காட்சிகளில்  நடித்துள்ளார். இது தவிர நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் காமெடி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். நேற்று முன்தினம் பிற்பகல் வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பிய ஷோபனாவின் [...]

JanuaryJth,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »

மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்த நடிகை ஷோபனா தற்கொலை?

மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்த நடிகை ஷோபனா தற்கொலை?

நடிகர் வடிவேலு,வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நகைச்சுவை நடிகை ஷோபனா நேற்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். அவரது இந்த தற்கொலைக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  

JanuaryJth,2011 | Posted in சினிமா, செய்திகள் | Read More »

மெக்சிக்கோ அகாபுல்கோ நகரில் ஒரேநாளில் 27 பேர் கொலை. 14 முண்டங்கள்.

மெக்சிக்கோ அகாபுல்கோ நகரில் ஒரேநாளில் 27 பேர் கொலை. 14 முண்டங்கள்.

மெக்சிக்கோ நாட்டில் அகாபுல்கோ கடற்கரையை அண்டிய பகுதியில் வெவ்வேறு பகுதிகளில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன. பசுபிக் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மட்டும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் 14 பேர்களின் உடல்கள் தலை துண்டிக்ப்பட்ட நிலையில் காணப்பட்டன. இன்னொரு இடத்தில் 6 பேர்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ராக்சி ஒன்றிற்குள் கை கால்கள் வெளியே தெரிய அடைக்கப்பட்டிருந்தனர். துப்பாக்கிச் கூட்டின்போது இரு பொலிஸார்களும் காயமடைந்துள்ளனர். போதை வஸ்து [...]

JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள் | Read More »

21 மணிநேரம் பனிக்குள் புதைந்தவர்கள்.

21 மணிநேரம் பனிக்குள் புதைந்தவர்கள்.

கனடாவில் கியபெக் மாகாணத்தின் வட பகுதியில் சில்வியோ லெற்றோ என்பவர் தனது சிநேகிதியுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது கடுமையான பனிப்பொழிவினால் கார் பாதையை விட்டு விலகி ஆறடி ஆழத்திற்குள் பனிக்குள் புதைந்தது. 21 மணி நேரமாக காருக்குள் இருந்து வெளியேற முடியாத நிலையிலிருந்த இருவரும் புத்தி சாதுர்யமாக காரின் பின ஆசனத்தைத் திறந்து உள்ளே இருந்த நீளமான கம்பி ஒன்றினை வெளியே செலுத்தி சைகை காட்டியதனால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். பனிக்குள் புதைந்திருந்த காரும் மீட்கப்பட்டது.

JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள் | Read More »

பனியினால் ஒரு மாளிகை

பனியினால் ஒரு மாளிகை

கனடாவில் கியுபெக் மாகாணத்தின் தலைநகரான கியுபெக் நகரில் வருடாவருடம் பனிக்காலத்தில் காணிவேல் நிகழ்வு நடைபெறுவதுண்டு. தைமாதம் உறைகின்ற குளிரில் நடைபெறும் இந்தக் காணிவேல் நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றுவதுண்டு. இந்த நிகழ்வில் ஐஸ் கட்டிகளினால் அரண்மனையும், ஹோட்டலும் அமைப்பார்கள். பளிங்கு மாளிகை போன்று கட்டப்பட்டிருக்கும் இந்தக் ஹோட்டல்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 250 டொலர்கள் முதல் 2500 டொலர்கள் வரைஅறவிடப்படுகிறது. தீருமண விழாக்களும் அதிக வாடகை கொடுத்து நடைபெறுகிறது.

JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள், MEDIA NEWS | Read More »

ஐஸ்வர்யா ராய் கொய்யாபழம்

ஐஸ்வர்யா ராய் கொய்யாபழம்

நடிகை ஐஸ்வர்யா ராயை கெளரவிக்கும் வகையில், அவரது பெயரில் புதிய கொய்யா பழம் ஒன்றை வெளியிட இருக்கிறார் பிரபல ‌தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான். லக்னோவை சேர்ந்த பிரபர ‌தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான். 70வயதான அவர் தோட்டக்கலையில் பட்டம் எதுவும் பெறவில்லை. வெறும் 7ம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஆனால் இவரது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக தோட்டத் தொழில் செய்து வருகின்றனர். சிறுவயது முதலே தோட்டக்கலையில் ஆர்வமுடன் செயல்பட்ட கலிமுல்லா கான் பல்வேறு [...]

JanuaryJrd,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »

நான் அவளில்லை!- நடிகை ரஞ்சிதா பேட்டி!

நான் அவளில்லை!- நடிகை ரஞ்சிதா பேட்டி!

“”சாமியார் நித்யானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக வெளியான “சிடி பொய்யானது. அதிலிருப்பது நான் அல்ல என்று நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். சாமியார் நித்யானந்தா – நடிகை ரஞ்சிதா “சிடி விவகாரம் வெளியான பிறகு முதன் முறையாக நடிகை ரஞ்சிதா பெங்களூரில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். பேட்டியின் போது அவர் பதட்டத்துடனும்  உருக்கமாகவும் கூறியதாவது: என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அந்த நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகவும் தைரியமாகவும் இருந்தனர். இவ்விஷயத்தில் நான் தைரியமாக [...]

JanuaryJrd,2011 | Posted in செய்திகள் | Read More »