Home » உலகச்செய்திகள் You are browsing entries filed in “உலகச்செய்திகள்”

சபரிமலை யாத்திரையில் இலங்கைத் தமிழர்கள் உட்பட 106 பேர் நெரிசலில் பலி

சபரிமலை யாத்திரையில்  இலங்கைத் தமிழர்கள் உட்பட 106 பேர் நெரிசலில் பலி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை காண சென்ற தமிழகம், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 106 பேர், கூட்டநெரிசலில் சிக்கி பலியாயினர். லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த இடம் வெளிச்சம் இல்லாத அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலில் திரண்டனர். இதனால், போலீசார் [...]

JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள், MEDIA NEWS | Read More »

மெக்சிக்கோ அகாபுல்கோ நகரில் ஒரேநாளில் 27 பேர் கொலை. 14 முண்டங்கள்.

மெக்சிக்கோ அகாபுல்கோ நகரில் ஒரேநாளில் 27 பேர் கொலை. 14 முண்டங்கள்.

மெக்சிக்கோ நாட்டில் அகாபுல்கோ கடற்கரையை அண்டிய பகுதியில் வெவ்வேறு பகுதிகளில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன. பசுபிக் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மட்டும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் 14 பேர்களின் உடல்கள் தலை துண்டிக்ப்பட்ட நிலையில் காணப்பட்டன. இன்னொரு இடத்தில் 6 பேர்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ராக்சி ஒன்றிற்குள் கை கால்கள் வெளியே தெரிய அடைக்கப்பட்டிருந்தனர். துப்பாக்கிச் கூட்டின்போது இரு பொலிஸார்களும் காயமடைந்துள்ளனர். போதை வஸ்து [...]

JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள் | Read More »

21 மணிநேரம் பனிக்குள் புதைந்தவர்கள்.

21 மணிநேரம் பனிக்குள் புதைந்தவர்கள்.

கனடாவில் கியபெக் மாகாணத்தின் வட பகுதியில் சில்வியோ லெற்றோ என்பவர் தனது சிநேகிதியுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது கடுமையான பனிப்பொழிவினால் கார் பாதையை விட்டு விலகி ஆறடி ஆழத்திற்குள் பனிக்குள் புதைந்தது. 21 மணி நேரமாக காருக்குள் இருந்து வெளியேற முடியாத நிலையிலிருந்த இருவரும் புத்தி சாதுர்யமாக காரின் பின ஆசனத்தைத் திறந்து உள்ளே இருந்த நீளமான கம்பி ஒன்றினை வெளியே செலுத்தி சைகை காட்டியதனால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். பனிக்குள் புதைந்திருந்த காரும் மீட்கப்பட்டது.

JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள் | Read More »

பனியினால் ஒரு மாளிகை

பனியினால் ஒரு மாளிகை

கனடாவில் கியுபெக் மாகாணத்தின் தலைநகரான கியுபெக் நகரில் வருடாவருடம் பனிக்காலத்தில் காணிவேல் நிகழ்வு நடைபெறுவதுண்டு. தைமாதம் உறைகின்ற குளிரில் நடைபெறும் இந்தக் காணிவேல் நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றுவதுண்டு. இந்த நிகழ்வில் ஐஸ் கட்டிகளினால் அரண்மனையும், ஹோட்டலும் அமைப்பார்கள். பளிங்கு மாளிகை போன்று கட்டப்பட்டிருக்கும் இந்தக் ஹோட்டல்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 250 டொலர்கள் முதல் 2500 டொலர்கள் வரைஅறவிடப்படுகிறது. தீருமண விழாக்களும் அதிக வாடகை கொடுத்து நடைபெறுகிறது.

JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள், MEDIA NEWS | Read More »

கொலராடோவில் பிறந்துள்ள அபூர்வ பன்டா மாடு

"> " />

கொலராடோவின் வடக்குப் பகுதியான காம்பியன் நகரில் அபூர்வமாகப் பிறக்கும் பன்டா மாடு பிறந்துள்ளது. உலகளவில் உள்ள 24 மாடுகளில் இதுவும் ஒன்றாகும். பார்ப்பதற்கு பன்டா கரடிகள் போல தோற்றமளிப்பதால் இதனை பன்டா மாடு என்று அழைக்கிறார்கள். புதுவருட தினத்திற்கு முதல்நாள் கிறிஸ் ஜெசன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் இது பிறந்துள்ளது. இந்த வகை மாடு வியாபார நோக்கத்திற்காக அல்லாமல் வெறும் வளர்ப்புப் பிராணியாக கருதப்படுகிறது. இதனுடைய விலை 30,000 அமெரிக்க டொலர்களாகும். கொலராடோவில் பிறந்துள்ள அபூர்வ பன்டா [...]

JanuaryJnd,2011 | Posted in உலகச்செய்திகள் | Read More »